#திருவள்ளூர் || பள்ளி கட்டிடத்தின் ஓடுகள் விழுந்த விபத்தில் 5 குழந்தைகள் பலத்த காயம்.!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம் சிறுவனூர் ஊராட்சியில் செய்தல் பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் மீது கட்டிட ஓடுகள் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மதிய உணவு அருந்தும் போது பள்ளி கட்டிடத்தின் ஓடுகள் இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த குழந்தைகள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சற்று முன்னர் மதுரை தெற்குத்தெரு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 16 மாணவ மாணவிகள் சிறிய காயங்களுடன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது திருவள்ளூரில் தொடக்கப்பள்ளி மாணவர்கள் மீது பள்ளியில் கட்டிடத்தின் ஓடுகள் சரிந்து விழுந்துள்ளது. பள்ளிகளில் அடுத்தடுத்து விபத்து ஏற்படும் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 children seriously injured in falling school building tiles in Thiruvallur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->