மருத்துவ படிப்பில் சாதனை..ஒரே அரசு பள்ளியை சேர்ந்த 5 மாணவிகள் தேர்வு.!
5 govt school students study medical
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த 2 நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த 2 நாட்களாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளிகள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடுகான நேரடி கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அதன்பின்னர் வரும் 30ஆம் தேதி முதல் பொது கலந்தாய்வு மாணவர் சேர்க்கை இணையதளங்கள் வாயிலாக நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த 5 மாணவிகள் மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளனர்.
English Summary
5 govt school students study medical