அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு!
5 members of the same family including 2 children were killed in an accident when a car collided with a government bus
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (35). இவர் ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் வலசை தெருவில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி பாண்டிச்செல்விக்கு (28) இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், ராஜேஷ் மற்றும் பாண்டிச்செல்வி, அவர்களின் மகள்கள் தர்ஷனா ராணி (8), பிரணவிகா (5), இரண்டு வார குழந்தை, பாண்டிச்சேரி பெற்றோர் செந்தில் மனோகரன் (70), அங்காள ஈஸ்வரி (60) ஆகியோர் குடும்பத்துடன் மருத்துவமனைக்கு வாடகை காரில் சென்று விட்டு தங்கச்சி மடத்துக்கு திரும்ப புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். வாடகை காரை சவாரி பிரிட்டோ (35) என்பவர் ஓட்டி வந்தார்.
இதனிடையில் நேற்று அதிகாலை திருப்பத்தூரில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் பயணி ஒருவர் வாந்தி எடுத்ததை அடுத்து திடீரென்று பேருந்து ஓட்டுனர் ராமநாதபுரம் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பிரப்பன் வலசை அருகே பேருந்தை திடீரென நிறுத்தினார்.
இதனையடுத்து பேருந்திற்கு பின்னால் ராஜேஷின் குடும்பத்தார் வந்த கார் பேருந்தின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ராஜேஷ் அவரது இரண்டு மகள்களான ரஷீனா ராணி, பிரணவிகா, பாண்டிச்சேரியின் பெற்றோர் செந்தில் மனோகரன், அங்காள ஈஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாண்டிச்செல்வி, அவரின் இரண்டு மாத ஆண் குழந்தை மற்றும் கார் டிரைவர் சவரி பிரிட்டோ ஆகியோரை இரண்டு மணி நேரம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பேருந்தில் இருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர்.
சம்பவம் அறிந்த உச்சிப்புளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த ஐந்து பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
English Summary
5 members of the same family including 2 children were killed in an accident when a car collided with a government bus