தாய் கண் முன்னே.. 5 வயது சிறுமியை குதறிய வளர்ப்பு நாய்கள்.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.!! - Seithipunal
Seithipunal


சென்னை ஆயிரம் விளக்கு பூங்கா அருகே வசித்து வருபவர் புகழேந்தி. இவர் தனது வீட்டில் இரு நாய்களை வளர்த்து வருகிறார். அதே பூங்காவில் காவலாளியாக பணிபுரிபவரின் மனைவி சோனியா தனது ஐந்து வயது மகள் சுதக்ஷாவுடன் பூங்கா அருகே சென்று கொண்டிருந்தார். 

அப்போது புகழேந்தி வளர்க்கும் நாய்கள் இரண்டும் ஐந்து வயது சிறுமி சுதக்ஷாவை கடித்துள்ளன. இதனால் பதறிப்போன சோனியா நாய்களை விரட்ட முயன்றுள்ளார். அப்போது சிறுமியை கடத்திய நாய்கள் அவரது தாய் சோனியாவையும் கடித்துள்ளன. இதனை எடுத்து அக்கம் பக்கத்தினர் அந்த நாய்களை விரட்டி அடித்துள்ளனர். 

இந்த சம்பவத்தில் தலையில் படுகாயம் அடைந்த ஐந்து வயது சிறுமி சுதக்ஷா மற்றும் அவருடைய தாய் சோனியா இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து புகார் தெரிவித்துள்ள சோனியா பூங்கா அருகே வசித்து வரும் புகழேந்தி தனது இரு நாய்களுடன் வந்தார். அப்போது அந்த இரண்டு நாய்களும் குழந்தையை கடித்த போது புகழேந்தி நாய்களை தடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

தலையில் பலத்த காயத்துடன் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுதக்ஷாவின் மருத்துவ செலவு முழுமையாக புகழேந்தி ஏற்றுக் கொள்வதாக தெரிவித்ததை அடுத்து அவர் ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் ஆயிரம் விளக்கு பூங்கா பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 year old girl injured after pet dogs bite her


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->