விவாகரத்தான பெற்றோர்.. அனாதையான 6 வயது சிறுமி.. சொந்த தாத்தாவே அத்துமீறிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


ஸ்ரீபெரும்புதூர் அருகே நல்லூர் திருப்பதி நகர் பகுதியில் சேர்ந்த ஒரு சிறுமியின் பெற்றோர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் பிரிந்து வெவ்வேறு திருமணம் செய்து கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக பெற்றோர் பிரிந்ததால் அந்த சிறுமி தனது தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். 

கடந்த இரு நாட்களுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் முதியவர்கள் சேர்ந்து கொண்டு ஆறு வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிடம் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அதன்பின் விசாரணை மேற்கொண்டதில் சிறுமைக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது உறுதியாகியது. இதனை தொடர்ந்து, சிறுமியின் தாத்தா ராஜேந்திரன் மற்றும் அவருடைய சகோதரன் தேவராஜ் இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். 

அதன் பின் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். பாதுகாப்பாக இருக்க வேண்டிய தாத்தா இப்படி, பேத்தியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 years child rapes 2 grand father


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->