10 வயது சிறுமியை குடிக்க வைத்த இளைஞர்கள் 6 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


10 வயது சிறுமியை 6 வாலிபர்கள் மது குடிக்க வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை என்ற பகுதியில் கடந்த மாதம் சிறுமியை மது குடிக்க வைத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது. இந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சிறுமிக்கு வாலிபர்கள் சிலர் மதுவை டம்ளரில் ஊற்றி கொடுத்து, பீடி புகைக்க பற்ற வைத்து கொடுத்ததும் தெரிய வந்துள்ளது. இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து 6 வாலிபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சிறுமிக்கு மது ஊற்றி, பீடி பற்ற வைத்து கொடுத்த அதே பகுதியை சேர்ந்த சங்கையா (வயது 22), குமார் (21), ரமேஷ் (22), சிவராஜ் (27), ருத்ரப்பா (26), அழகப்பன் (26) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் இதில் தொடர்புடைய சிவருத்ரப்பா, மல்லேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 youths arrested for making a 10-year-old girl drink.


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->