சென்னையில்‌ மீண்டும் அதிர்ச்சி.. 6 வயது சிறுவனை கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்.!! - Seithipunal
Seithipunal


சென்னை புளியந்தோப்பு கேபி பார்ப்பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் நேற்று மதியம் தனது வீட்டில் வெளியே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவ்வழியாக வந்த வளர்ப்பு நாய் கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கே.பி பார்க் பகுதியில் நடை பயிற்சிக்காக நாயை அழைத்துச் சென்றபோது இந்த அதிர்ச்சியூட்டும சம்பவம் அரங்கேறியுள்ளது.

வளர்ப்பு நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த 6 வயது சிறுவன் ஹரிஷ் குமார் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சென்னை மாநகராட்சி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கிய நிலையில் நாயின் உரிமையாளர் ஸ்டெல்லா உட்பட 3 பேர் மீது பேஷன் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

நாயின் உரிமையாளர் ஸ்டெல்லாவை கைது செய்த பேஷன் பிரிட்ஜ் போலீசார் வழக்கு நாய்க்கு முறையாக தடுப்பூசி போடப்பட்டதா? நாய் வளர்க்க உரிமம் பெறப்பட்டுள்ளதா? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே நுங்கம்பாக்கம் பகுதியில் 5 வயது சிறுமி மற்றும் அவரது தாயை வளர்ப்பு நாய் கடித்த விவகாரத்தில் சென்னை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6year old boy injury in dog attack in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->