சரக்குடன் பிறந்தநாள் கொண்டாட்டம்! "பள்ளி மாணவிகள்" 7 பேர் சஸ்பெண்ட்! விரத்தியில் மாணவி எடுத்த விபரீத முடிவு! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் மது அருந்தி பிறந்தநாள் கொண்டாடிய 7 மாணவிகள் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் விரக்தி அடைந்த ஒரு மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு கடந்த மாதம் 16ஆம் தேதி பிறந்தநாள் வந்துள்ளது. அதனை சிறப்பாக கொண்டாட முடிவு செய்த மாணவிகள் ஆண்களைப் போல தாங்களும் பீர் உள்ளிட்ட மதுபானத்தை குடித்து பிறந்த நாளை குதூகலமாக கொண்டாட முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதற்காக அவர்கள் பீர் பாட்டில் வாங்கி அதனை யாருக்கும் தெரியாமல் பள்ளிக்கு எடுத்து வந்ததோடு மதிய உணவு இடைவேளையின் போது வகுப்பறையில் யாரும் இல்லாத போது பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். அந்த சமயத்தில் அங்க வந்த மாணவர்கள் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் தெரிவித்ததை அடுத்து சம்பந்தப்பட்ட 7 மாணவிகளையும் அழைத்து கண்டித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்ததோடு 7 மாணவிகளையும் பள்ளியிலிருந்து தலைமையாசிரியர் இடைநீக்கம் செய்துள்ளார். இதனால் வீரத்தில் இருந்த ஒரு மாணவி தனது பெற்றோரிடம் இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என வருத்தம் தெரிவித்து விரத்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த மாணவி கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து இருந்த நிலையில் சிகிச்சை முடிந்து வீடு உள்ளார். இந்த நிலையில் பூச்சி மருந்து அருந்திய மாணவிக்கு நேற்று முன்தினம் மீண்டும் உடல்நிலை மோசமானதால் அவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து நிலக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியில் மது அருந்தி பிறந்தநாள் கொண்டாடிய சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவிகளில் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 school girls suspended for celebrated birthday with beer one attempted suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->