3 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 70 வயது முதியவர்..போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கெம்பத்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 3 வயது பெண் குழந்தையிடம், அதே கிராமத்தை சேர்ந்த முதியவர் (70) நாராயணப்பா என்பவர் சில்மிஷத்தில் ஈடுபட்டு பாலியல் பலாத்கார செயலில் ஈடுபட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து அறிந்த குழந்தையின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் முதியவர் நாரயணப்பாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் முதியவர் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

இதனையடுத்து அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சம்பூரணம், பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து பின்னர் அவரை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

70 years old man sexual Harrasment for 3 year child


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->