தமிழக எல்லையில் சிக்கிய 7,525 லிட்டர் எரிச்சாராயம் - 2 பேர் கைது.!
7525 litter liquor seized in hosur and salem by pass
கர்நாடகா மாநிலத்தில் இருந்து தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளாவிற்கு அடிக்கடி மதுபான வகைகள், எரிசாரயம், குட்கா பொருட்களை கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் மர்ம நபர்கள் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் படி கோவை மண்டல மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று ஓசூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் 215 கேன்களில், 7,525 லிட்டர் எரிசாரியம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் கர்நாடகா மாநிலம் உப்பள்ளியில் இருந்து பெங்களூர்-ஓசூர் வழியாக கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து எரிசாராயத்தை மினி லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த 2 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
7525 litter liquor seized in hosur and salem by pass