தேசிய தொழிற்சங்கத்தின் 75 ஆம் ஆண்டு வைர விழா..உடல் உறுப்பு தானம் செய்த தொழிற்சங்கங்க நிர்வாகிகள்!
75th Diamond Jubilee of National Trade Union Trade union officials donate organs
ராணிப்பேட்டையில் மாநில தொழிற்சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவும், தேசிய தொழிற்சங்கத்தின் 75 ஆம் ஆண்டு வைர விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தனியார் திருமண மண்டபத்தில் சுதந்திர தொழிற்சங்கங்களின் தேசிய கூட்டமைப்பின் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.
மாவட்ட தலைவர் சேட்டு அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொருளாளர் பசுபதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றி சிறப்பித்தனர்.
முன்னதாக அலுவலக திறப்பு விழா, உடல் உறுப்பு தானம், அடையாள அட்டை வழங்குதல், நினைவு பரிசு வழங்குதல் மற்றும் வங்கி கணக்கு துவங்கி அனைவருக்கும் வங்கி புத்தகம் வழங்கப்பட்டது. மேலும் அனைவருக்கும் காப்பீடு செய்து அதன் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதில் சங்கத்தின் வளர்ச்சி பற்றியும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
மாநில தொழிற்சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவும், தேசிய தொழிற்சங்கத்தின் 75 ஆம் ஆண்டு வைர விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இறுதியில் மாவட்ட செயலாளர் ஞானசேகர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
English Summary
75th Diamond Jubilee of National Trade Union Trade union officials donate organs