#ராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.88 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்.! 2 பேர் கைது - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூபாய் 88 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடற்கரை வழியாக போதைப் பொருள்கள் இலங்கைக்கு கடத்த இருப்பதாக வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து நேற்று முன் தினம் இரவு ராமநாதபுரம் முதல் மதுரை வரை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது பரமக்குடி அடுத்த சுங்கச்சாவடியில் கார் ஓன்றை நிறுத்தி சோதனை செய்ததில், 88 கிலோ எடையுள்ள போதை பொருட்களும் அரைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரையும் போதை பொருட்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் காரில் இருந்த இரண்டு பேரையும் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த பாக்கியராஜ்(39) மற்றும் தனசேகரன்(32) என்பது தெரியவந்தது. மேலும் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் சர்வதேச சந்தையின் மதிப்பு ரூபாய் 88 கோடி என்றும், அதனை இலங்கைக்கு கடத்த முயன்று இருக்கலாம் என்று வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

88 crore worth drugs seized trying to smuggle to Sri Lanka


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->