மயிலாடுதுறையில் 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.!! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டம் ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் 9 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மயூரா மெட்ரிக் பள்ளி புனித அந்தோனியார் உயர்நிலைப்பள்ளி, டாக்டர் அம்பேத்கர் நகராட்சி தொடக்கப்பள்ளி கேம்பிரிட்ஜ் பள்ளி ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று சின்ன ஏரகலி நகராட்சி தொடக்கப்பள்ளி, அக்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மறையூர் தூய அந்தோணியார் தொடக்கப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அழகு ஜோதி நர்சரி பிரைமரி பள்ளி ஆகியவற்றிற்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று முதல் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். சீர்காழி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனத்துறையினர் சிறுத்தை பிடிப்பதற்காக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 schools holiday in Mayiladuthurai due to leopard movement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->