₹2000 நோட்டு மாற்ற 1 கோடிக்கு ரூ10 லட்சம் கமிஷன்.. ஆசை காட்டி ரூ.90 லட்சம் சுருட்டிய கரூர் கும்பல்.!! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் தன்னிடம் ஒரு கோடி ரூபாய்க்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், அதனை மாற்றி தந்தால் கமிஷன் தருவதாகவும் ஷாஜகான் என்பவரிடம் கூறியுள்ளார். இதனை அறிந்து கொண்ட ஷாஜகானின் நண்பர்கள் குணசேகரன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் ஒரு கோடிக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் 90 லட்சத்திற்கு 500 ரூபாய் நோட்டுகள் தருவதாக தெரிவித்துள்ளார்

இதற்கு ஒப்புக்கொண்ட சக்திவேல், ஷாஜகானையும், அவரது நண்பர்களையும் திண்டுக்கல் கொண்டம நாயக்கனூரிலுள்ள தனது தோட்டத்திற்கு வரவழைத்துள்ளார். பின்னர் குணசேகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் 9 பேரும், ஷாஜகானையும், அவரது நண்பர்களையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி 90 லட்சத்தை பறித்துக்கொண்டு, அவர்கள் வந்த காரிலேயே தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் தப்பி ஓடிய கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

90 lakh robbery by claiming to exchange Rs2000 note


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->