வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து 3 வயது சிறுவன் படுகாயம்!! - Seithipunal
Seithipunal


திருவொற்றியூரில் பழைய வீட்டின் பால்கனி இடிந்து விழுந்து 3 வயது சிறுவன் காயமடைந்தார். பால்கனி இடிந்து பக்கத்து வீட்டின் ஓட்டு வீடு மீது விழுந்தது. அங்கிருந்த கட்டில், பீரோ, வாஷிங் மிஷின் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் வடக்கு மாடவீதி செட்டி தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் நிர்மலா (50). மிகவும் பழமையான அந்த வீட்டில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திடீரென வீட்டு மாடியில் உள்ள பால்கனி சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்து பக்கத்து வீட்டில் விழுந்தது. அந்த சமயத்தில் அந்த வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இடிந்து விழுந்த பால்கனியின் ஒரு பகுதி தெருவில் சிதறியது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த நவீன் கிஷோர் என்ற 3 வயது சிறுவன் தலையில் கல்பட்டு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர். இதுகுறித்து திருவொற்றியூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A 3 year old boy was seriously injured when the balcony of the house collapsed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->