திருநெல்வேலி : பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீர்.! 7ஆம் வகுப்பு மாணவன் மூழ்கி பலி.!!
A 7th class boy drowned in a ditch dug for an underground sewer in tirunelveli
திருநெல்வேலி மாவட்டத்தில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய நீரில் 7ஆம் வகுப்பு மாணவன் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியில் பாதாளசாக்கடை பணிக்காக 25 அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த பணி கிடப்பில் போடப்பட்டதால் பள்ளம் முழுவதும் மழை நீர் நிரம்பி கிணறு போல் உள்ளது.
இந்நிலையில் மனக்காவளம்பிள்ளை நகர் பகுதியை சேர்ந்த மனோஜ் (12) என்ற ஏழாம் வகுப்பு மாணவன் நேற்று மாலை நண்பர்களுடன் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி குளித்துள்ளான். அப்பொழுது எதிர்பாராத விதமாக மனோஜ் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி மனோஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
A 7th class boy drowned in a ditch dug for an underground sewer in tirunelveli