கோவை | சாக்கடையில் தங்க துகள்கள் சேகரித்த 7ஆம் வகுப்பு மாணவன்... விஷவாயு தாக்கி பலி.!
A 7th class boy who collected gold particles in the drain died of poison gas in kovai
கோவை மாவட்டத்தில் சாக்கடையில் தங்க துகள்கள் விவரித்து ஏழாம் வகுப்பு மாணவன் விஷவாயுத்தாக்கி உயிரிழந்துள்ளான்.
நாமக்கல் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்தவர் பாலன் (40). இவர் கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் தங்கி தங்க துகள்கள் சேகரிக்கும் வேலை பார்த்து வந்தார். இவரது மகன் விக்னேஷ்(13) நாமக்கல்லில் உள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாலனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தந்தைக்கு உதவியாக விக்னேஷ் கோவை வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை உறவினர்கள் சிலருடன் சிறுவன் விக்னேஷ் வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் தங்க துகள்கள் சேகரித்துக் கொண்டிருந்தபோது திடீரென விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து சிறுவனை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தங்க பட்டறைகளில் பயன்படுத்தும் கெமிக்கல்கள் சாக்கடை நீரில் கலந்ததால் விஷவாயு தாக்கி சிறுவன் உயிரிழந்தது தெரியவந்தது. தந்தைக்கு உதவி செய்வதற்காக வந்த சிறுவன் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
A 7th class boy who collected gold particles in the drain died of poison gas in kovai