நீச்சல் பழகிய போது நீரில் மூழ்கி 8 வயது சிறுவன் பலி.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் நீச்சல் பழகிய போது நீரில் மூழ்கி 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம் ஆவுத்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் இளமுருகன்(8). பள்ளி விடுமுறை என்பதால் தம்மநாயக்கன்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு இளமுருகன், தந்தையுடன் சென்றுள்ளான்.

இந்நிலையில் அங்குள்ள விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றில் சரவணன் தனது மகனுக்கு நீச்சல் பழக்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென இளமுருகன் தண்ணீரில் மூழ்கியுள்ளான். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் உதவியுடன் சிறுவனை மீட்க முயன்றனர்.

ஆனால் சிறுவனை மீட்க முடியாததால் இது குறித்து கரூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேடி சிறுவனை சடலமாக மீட்டனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வெள்ளியனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A 8 year old boy drowned while practicing swimming in karur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->