120 அடி கிணற்றில் வீழ்ந்து சிறுவன்.. 4 அடி‌ நீரால் உயிர் பிழைத்த அதிசயம்.!! - Seithipunal
Seithipunal


120 ஆழ கிணற்றில் விழுந்த 14 வயது சிறுவன் நான்கு அடி தண்ணீரால் உயிர்பிழைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கேத்திரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பவித்ரன் அதிகாலை தனது விவசாய நிலத்திற்கு சென்ற போது 120 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்துள்ளார். 

கிணற்றில் விழுந்த சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் பவித்ரனை பத்திரமாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

வெயில் காலம் என்பதால் பெரும்பாலான கிணறுகளில் தண்ணீர் பற்றி காணப்படும் நிலையில் வெறும் நான்கு அடி நீர் இருந்ததால் 14 வயது சிறுவன் உயிர் பிழைத்துள்ள சம்பவம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பேசும் பொருளாக மாறி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A boy fell 120 feet into a well survived with 4 feet water


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->