15 உலக சாதனை செய்துள்ள எனக்கு இது சகஜம் தான் - விஜய் பிறந்தநாள் நலத்திட்ட விழாவில் கையில் தீப்பற்றிய சிறுவன் பேட்டி..! - Seithipunal
Seithipunal


சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள நீலாங்கரையில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தவெக தலைவர் விஜயின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சியின் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கஜபதி - பிரியா தம்பதியினரின் மகன் 11 வயதான 7ம் வகுப்பு படித்து வரும் கிரீஷ்வா கலந்து கொண்டு சிலம்பம், ஸ்கேட்டிங், வாள் சுற்றுதல், ஓடு உடைத்தல் உள்ளிட்ட சாகசங்களை கராத்தே மாஸ்டர் ராஜன் துணையுடன் செய்து காட்டினார். 

அப்போது எதிர்பாராத விதமாக ஓடுகளின் மீது ஊற்றிய பெட்ரோல் சிறுவனின் கையில் பற்றியது. இச்சம்பவத்தில் காயமடைந்த சிறுவனும், மாஸ்டர் ராஜனும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். 

இது குறித்து சிறுவனின் தாய் பிரியா , "எனக்கு விஜயை மிகவும் பிடிக்கும். எனக்காக தான் என் மகன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருக்கும் விஜயை மிகவும் பிடிக்கும். இந்த விபத்து எதிர்பாராமல் நடந்தது தான். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் அந்த சிறுவன் பேசுகையில், "நான் இதுவரை 15 உலக சாதனை படைத்துள்ளேன். இது எனக்கு சகஜம் தான். ஓடுகளை உடைக்கும்போது கைகளில் பெட்ரோல் ஊற்றுவது வழக்கம் தான். விரைவில் மீண்டு வருவேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Boy Who Injured in Vijay Birthday Event Says That This is Normal For a 15 World Record Holder


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->