நிதித்துறைக்கு கமிட்டி அமைக்க வேண்டும்..காங் MLA வைத்தியநாதன் கோரிக்கை!
A committee should be set up for the finance department Congress MLA Vaidyanathan demands
நிதித்துறைக்கு கமிட்டி அமைக்க வேண்டும். புதுவை மருத்துவ கல்லூரியில் யுபிஎஸ் மூலமாக மருத்துவர்களை தேர்வு செய்ய வேண்டும் என காங் சட்ட மன்ற உறுப்பினர் வைத்தியநாதன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் காங் உறுப்பினர்வைத்தியநாதன் பேசியதாவது:நிதித்துறைக்கு கமிட்டி அமைக்க வேண்டும். புதுவை மருத்துவ கல்லூரியில் யுபிஎஸ் மூலமாக மருத்துவர்களை தேர்வு செய்ய வேண்டும். உயிர் காக்கும் மருந்துகளை மலிவான விலையில் வாங்காதீர்கள். அவசர சிகிச்சை பிரிவில் சரியான படுக்கை வசதிகள் இல்லை. மருத்துவமனையில் கழிவறை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். ஜிப்மர் மருத்துவமனையில் எம்எல்ஏகளை மதிப்பதில்லை. இந்த மருத்துவமனைக்கு அனைத்துஉதவிகளையும் நம் அரசு செய்கிறது. ஆஷா பணியாளர்களுக்கு பணி சுமை அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
4 ஆண்டு ஆகியும் இதுவரை சட்டமன்றம் கட்ட அடிக்கல் நாட்ட்படவில்லை. கட்ட திட்டமிட்டுள்ள தொகையை குறைத்தால் மத்திய அரசு அனுமதி கொடுக்கும் என நினைக்கிறோம். சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் அதிக விபத்து ஏற்படுகிறது. அவர்களது உரிமையாளர்களை கண்காணித்து எச்சரிக்கை விட வேண்டும். அபராத தொகை விதித்து முறைப்படுத்த வேண்டும். நகராட்சியில் பிறப்பு இறப்பு சான்றிதழ் கொடுப்பதற்கான நேரத்தை அதிகப்படுத்த வேண்டும். ஆன்லைனில் அனைத்து சேவைகளையும் கொண்டு வர வேண்டும். புதுச்சேரி உழவர்கரை நகராட்சிகள் மூலம் பல கடைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாடகை விடுவதில்லை. இதனால் நஷ்டம் ஏற்படுகிறது. புதிதாக வருமானம் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டி முடிக்கப்பட்டுள்ள மீன் மார்க்கெட்டை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
குப்பை வண்டிகள் பல பகுதிகளுக்கு செல்வதில்லை. நீராதாரத்தை பெருக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. முழுமையாக ஏரி, குளங்களை தூர்வார வேண்டும். புதுவையில் தங்கும் விடுதி இல்லை. டெல்லியில் நமக்கென உள்ள தங்கும் விடுதியில் சரியான இடவசதி, உணவு வசதி இல்லை. நாம் அனுப்பும் நபர்கள் தங்க முடிவதில்லை. செய்தி விளம்பரத்துறை செயலற்ற துறையாக இருக்கிறது. இத்துறையில் ஆள் பற்றாக்குறை உள்ளது. மாற்றுப்போக்குவரத்துகுறித்து அரசு இன்னும் சிந்திக்கவில்லை. வார இறுதி நாட்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. ரெஸ்டோ பார் நேரத்தை குறைக்க வேண்டும். புதுவையில் புகையை கக்கி செல்லும் வாகனங்களை தடை செய்ய வேண்டும். வருவாயை பெருக்க அரசு துறைமுகம் மூலமாக வருவாயை ஈட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
மின்துறையில் ஆள்பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும். அறிவிக்கப்படாத மின்வெட்டி நம் ஊரில் உள்ளது. சிபிஎஸஇ பாடத்திட்டத்தால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு பெண் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். புகார் பெட்டிகளை வைப்பதை விட நல்ல பெண் ஆசிரியர்களை நியமிக்கலாம். அரசு பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளை நடத்த வேண்டும். புதுவை பல்கலைக்கழகத்தில் முக்கிய பாடப்பிரிவுகளில் புதுவை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதில்லை. பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை தொடங்க வேண்டும். கல்வித்துறை வளாகத்தில் உள்ள லிப்ட் இயங்காமல் உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும். ஐடிஐ, பாலிடெக்னிக் ஆகியவற்றை ஆய்வு செய்து முறைப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கான கல்வி கடன் வட்டி அதிகமாக உள்ளது. இதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிலையங்களில் பணிபுரியும் காவலாளிகள் இரவு பணியில் இருப்பதில்லை. இதனால் சமூக விரோத செயல்கள் நடக்கிறது.
புதுச்சேரியில் சைபர் க்ரைம் நன்றாக செயல்படுகிறது. நேர்மையான போலீசார் பலர் இருக்கிறார்கள் ஆனால் ஒரு சில காவலர்கள் பணத்திற்காக செயல்படுகின்றனர். காவல் நிலையங்களில் புகார் அளிக்க வரும் பெண்களிடம் ஒரு சிலர் தவறாக பேசுகிறார்கள். இவற்றை சரி செய்ய வேண்டும். போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை தாக்கியவர்களை காப்பாற்ற உயர் இடத்தில் இருந்து சிபாரிசு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இது தவறான செயல். காவல் நிலையங்களில் 2 மாதத்திற்கு ஒரு முறை சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். போதை பொருள் விற்பனையை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். போதை பொருள் விற்கும் முக்கிய குற்றவாளிகளை ஏன் இதுவரை கண்டுபிடிப்பதில்லை என காங் உறுப்பினர்வைத்தியநாதன்பேசினார்.
English Summary
A committee should be set up for the finance department Congress MLA Vaidyanathan demands