சாம்பார் அண்டாவில் விழுந்து., துடிதுடித்து பலியான 5 வயது பிஞ்சு.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில்  குதிக்கும் சாம்பார் சட்டிக்குள்  தவறி விழுந்த ஐந்து வயது சிறுவன்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம்  அப்போதுகளில் சோகத்தை அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது . இச்சம்போகம் தொடர்பாக காவல்துறையினரும் விசாரணை செய்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் நாட்டாமை தெருவில்     வசித்து வருபவர் சிவன்மாரி. இவர் அச்சம்பட்டி பகுதியில் ஏழை மாணவர்களுக்காக ராணுவ பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இந்தப் பள்ளியில் படித்து தேர்வு பெற்ற  பலமானவர்கள் இன்று இந்திய ராணுவத்தில் பணியில் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி சிவன் மாரி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ராணுவ பயிற்சி பள்ளிக்கு சென்று இருக்கிறார். மதிய வேலை என்பதால் அங்கு பயிலும் மாணவர்களுக்கு உணவு தயாராகிக் கொண்டிருந்திருக்கிறது.

பள்ளியில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த சிவன் மாரியின் ஐந்து வயது மகன் இஷாந்த் எதிர்பாராத விதமாக சாம்பார் பானைக்குள் விழுந்துள்ளான்.  கொதிக்கும்  சாம்பார் சட்டிக்குள் சிறுவன் விழுந்ததால் உடலெல்லாம் வெந்து காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிலும் தான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A five year old boy who fell into the sambar pot was succumbed to his injuries


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->