அதிவேகமாக வந்த பள்ளி வாகனம் சுற்றுலா வேன் மீது மோதி விபத்து - 7 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிவேகமாக வந்த பள்ளி வாகனம் சுற்றுலா வேன் மீது மோதிய விபத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த 18 பேர், சுசீந்திரம் தாணுமாலையான் சுவாமி கோவிலுக்கு செல்வதற்காக தனியார் வேனில் புறப்பட்டு சென்றனர். 

அப்பொழுது சுவாமிநாதபுரம் அருகே சென்ற போது, அவ்வழியாக அதிவேகமாக வந்த தனியார் பள்ளி வாகனம் ஒன்று திடீரென நிலைதடுமாறி சுற்றுலா வேன் மீது பயங்கரமாக மோதியது.

இதில் சுற்றுலா வேனில் பயணம் செய்த 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A high speed school vehicle collided with a tourist van in kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->