மதுரை.! மீன்பிடிக்க சென்ற கூலி தொழிலாளி உயிரிழப்பு.!
A laborer who went fishing was killed in Madurai
மதுரை மாவட்டத்தில் மீன்பிடிக்க சென்ற கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் கீழ உரப்பனூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி மதன்குமார(39). இவருடைய மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
இன்று கீழஉரப்பனூர் கண்மாயில் மீன் பிடிப்பதற்காக மதன்குமார் அப்பகுதியை சேர்ந்தவர்களுடன் சென்றுள்ளார். அப்பொழுது மதன்குமாருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் தண்ணீரில் விழுந்து உள்ளார்.
இந்நிலையில் உடனடியாக அவரை மீட்டு கண்மாய் கரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதையடுத்து சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதனை செய்த மருத்துவர் மதன்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A laborer who went fishing was killed in Madurai