தஞ்சாவூரில் சட்டக் கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூரில் பெட்ரோல்  நிலைய பெண் ஊழியருக்கும்,  வாடிக்கையாளருக்கும் ஏற்பட்ட தகராறில் பெண்ணின் உறவினர் சட்டக்கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் பெண் ஊழியருக்கும் வாடிக்கையாளரான சட்டக் கல்லூரி மாணவருக்கும் ஏற்பட்ட தகராறில், அப்பெண்ணின் கணவர் சட்டக்கல்லூரி மாணவரை அறிவாளால் வெட்டியுள்ளார். 

சனிக்கிழமை காலையில் பாலசுப்பிரமணியம் என்பவர் பெட்ரோல் போடுவதற்காக வந்துள்ளார் அப்போது பாலசுப்பிரமணியத்திற்கும் அங்கிருந்த பெண் ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு அதிகரித்துப் போனதால் பெண் ஊழியர் தனது கணவருக்கு போனில் கால் செய்து தகவலை சொல்லி இருக்கிறார். 

இதனை அறிந்த பெண்ணின் கணவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தார். இதேபோல் பாலசுப்ரமணியமும் சட்டக் கல்லூரி மாணவர் ஹரிஹரனை அழைத்து வந்தார். பெண் ஊழியரின் கணவருக்கும் ஹரிகரனுக்கும் வாக்குவாத முற்றிப்போன நிலையில் ஹரிஹரன் பெண் ஊழியரின் கணவரை தாக்கியுள்ளார். இதனால் மிகுந்த ஆத்திரம் அடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஹரிகரனை வெட்டத் தொடங்கினார். இதை பார்த்த அங்கிருந்த மக்கள் தலை தெரிக்க ஓடினார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதைனையடுத்து சட்டக் கல்லூரி மாணவர் ஹரிஹரனை அங்கிருந்த சிலர் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இச்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

பட்டப் பகலில் சட்டக் கல்லூரி மாணவரை ஒருவர் அரிவாளால் வெட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி தஞ்சாவூர் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியதோடு இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A law student in Thanjavur was cut with a sickle


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->