இணைப்பு சாலை அமைக்க வேண்டும்..மாவட்ட ஆட்சியரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சிவா கோரிக்கை!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா, வில்லியனூர் தொகுதி எழில் நகர் மக்களுடன் சென்று மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
 
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:புதுச்சேரி மாநிலத்தில் குறிப்பாக நகரின் மையப்பகுதியில் கடந்த காலங்களில் புதிய மனைப்பிரிவு ஏற்படுத்திய போது அந்த நகரில் இருந்து புதுச்சேரியின் பிரதான பகுதிகளுக்கு செல்ல இணைப்புச் சாலை ஏற்படுத்தி கொடுக்காத காரணத்தால் அவசர காலத்தில் நேரடியாக நகரின் மையப் பகுதிக்கு செல்ல முடியாமல் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. 
 
அதே நிலைதான் வில்லியனூர் சட்டமன்ற தொகுதி, ஜி.என். பாளையம் கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட எழில் நகருக்கும் உள்ளது. சுமார் 150 குடும்பங்கள் வசிக்கும் அந்நகருக்கு ஜி.என்.பாளையம் காமன் கோவில் தெருவில் இருந்து 11 அடி அகலம் கொண்ட ஒரே சாலை மட்டுமே உள்ளது. எழில் நகரையும், அரும்பார்த்தபுரம் திருக்குறளார் நகரையும் இணைத்து சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும். இதற்கு இடையில் உள்ள 400 சதுர அடி இடம் தனி நபருக்கு சொந்தமாக உள்ளதை அரசு சார்பில் பெற்றுக்கொடுத்து சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் ஜி.என்.பாளையம், சுல்தான்பேட்டை, வெண்ணி சாமி நகர், வெங்கடேஸ்வரா நகர், நடராஜன் நகர், வள்ளியம்மை நகர், முத்துப்பிள்ளை பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பயன்பெறுவார்கள். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தொடர்ந்து, வில்லியனூர் திருக்காமீஸ்வரர் ஆலயத்திற்கு என்று கண்ணம்மாள் என்பவர் தானமாக வழங்கிய இடத்தை சுத்தம் செய்து அந்த இடத்தில் தேர் நிறுத்தம் அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A link road should be constructed. Opposition leader Siva appeals to District Collector


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->