சிறைக் கைதிகளைப் பார்க்க லஞ்சமா!!! இரண்டு வார்டன்கள் தற்காலிக பணி நீக்கம்....
Bribery to see prisoners Two wardens suspended
தர்மபுரியில், மாவட்ட சிறையில் 150 க்கும் மேற்பட்ட கைதிகள் இருக்கின்றனர். அங்கிருக்கும் கைதிகளைக் காண அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவ்வப்போது வந்து போவது வழக்கம். இந்நிலையில் சிறை விஜிலன்ஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. சிறையில் கைதிகளைப் பார்க்க வருபவரிடம் பணம் வசூலிக்கப்படுவதாக அந்தத் தகவல் இருந்தது. இத்தகவலின் அடிப்படையில் அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டது .

கைதிகளிடம் லஞ்சம்:
இந்த விசாரணையில், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வடமாநில இளைஞர்களைப் பார்க்க வந்த அவரது சகோதரரிடம் லஞ்சம் வாங்கியது தெரியவந்துள்ளது. இந்தத் தகவலின் பெயரில் சிறை வார்டன்களான திருப்பதி மற்றும் சௌந்தர்ராஜன் ஆகியோரைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் அங்குள்ள மொத்த வார்டன்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தனர். இதுபோன்ற காரியங்களை இனியாவது செய்யாது இருக்க அதிகாரிகள் அங்குள்ள பணியாளர்களுக்கு எச்சரிக்கைத் தகவலை தெரிவித்துள்ளனர்.
English Summary
Bribery to see prisoners Two wardens suspended