கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி.! 2 குழந்தைகளுடன் ரயில் முன்பாய்ந்து தாய் தற்கொலை..!! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி அம்மு. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ் வேலைக்குச் செல்லாமல் எப்பொழுதும் மது அருந்தி இருந்ததால் கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து இவர்களிடையே நேற்று இரவு முதல் தகராறு ஏற்பட்டதால், மனமுடைந்த அம்மு இரண்டு குழந்தைகளுடன் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் ரயில் தண்டவாளத்தில் சடலங்கள் கிடப்பதை பார்த்தவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூன்று சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A mother committed suicide by jumping in front of a train with two children in kirishnagiri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->