பெரியார் சிலை மீது செருப்பை வீசிய நபர்; கைது செய்த போலீசார்..!
a person throws a shoe at the Periyar statue
நேற்று மாலை வாலிபர் ஒருவர் சென்னை குமரன் நகர் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள பெரியார் சிலை மீது செருப்பை வீசியுள்ளார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த வாலிபரை பிடித்து, குமரன் நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு பெரியார் சிலை மீது வாலிபர் செருப்பை வீசிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செருப்பை வீசிய நபர் ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் அஜய் (வயது 32) என கூறப்படுகிறது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் பெரியார் குறித்து விமர்சித்தது சர்ச்சையானதும், அவர் மீது 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
a person throws a shoe at the Periyar statue