பயமா எங்களுக்கா..! "மோடி வந்தால் என்ன? டாடி வந்தால் என்ன?".. கெத்தாக உட்கார்ந்திருந்த சி.எம்.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களின் முதற்கட்ட தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சரமான மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்த கூட்டம் குறித்து பாஜகவினர் பலர் பல்வேறு எதிர்மறை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் நாடாளுமன்ற தொகுதி பொது தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என சமூக வலைதளங்களில் அவருடைய ஆதரவாளர்களும் பாஜகவினரும் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே ராமநாதபுரம் மாவட்ட நகர் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவர் ஒட்டிய போஸ்டர் தற்பொழுது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரு.சுப்பிரமணியன் என்பவர் திமுக மாவட்ட பிரதிநிதியாக இருந்து வருகிறார். 

அவர் இன்று ராமநாதபுரம் நகர் பகுதிகளில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் படத்தின் புகைப்படத்தில் முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் படத்தை எடிட் செய்து ஒட்டப்பட்ட போஸ்டரில் "எங்கள் மாமன்னர்கள் மண்ணில் இருக்கும் வரை ராம்நாட்டுக்கு மோடி வந்தால் என்ன? டாடி வந்தால் என்ன? பயமா எங்களுக்கா?" என்ற வசனத்தோடு போஸ்டர் ஒட்டியுள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசும் பொருளாக மாறி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A poster about modi in ramanathapuram went viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->