ஒட்டப்பிடாரம் அருகே 36 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து திடீரென தீப்பிடிப்பு.!
A private bus carrying 36 passengers caught fire near Ottapidaram
36 பயணிகளுடன் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து கோவை நோக்கி சென்ற தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து கோயம்பத்தூர் நோக்கி நேற்று இரவு தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது ஒட்டப்பிடாரம் அருகே பேருந்தின் முன் பகுதி திடீரென தீப்பிடித்து புகை வந்துள்ளது.
இதைப் பார்த்த ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி, பயணிகளை கீழே இறங்க சொன்ன நிலையில் பேருந்தில் இருந்த அனைவரும் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடி உள்ளனர். இந்நிலையில் பேருந்து முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு சுமார் ஒரு மணி நேரம் கடும் போராட்டத்திற்குப் பின்பு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஆனால் இந்த தீ விபத்தில் பேருந்து முழுவதும் எரிந்து நாசமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து பேருந்து தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A private bus carrying 36 passengers caught fire near Ottapidaram