தென்காசி | இருசக்கர வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - இளைஞர் பலி - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்த விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.

தென்காசி மாவட்டம் திருச்சிற்றம்பலம் பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் இசைராஜா(23). இவர் அதே பகுதி பஜனைமட தெருவைச் சேர்ந்த முருகேஷ் (19) என்பவருடன் நேற்று இரவு பாவூர்சத்திரத்தில் உள்ள அவர்களது நண்பர்களை பார்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

அப்பொழுது மேலப்பாவூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் இசைராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் முருகேஷ் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பாவூர்சத்திரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A twowheeler overturned in a ditch on the roadside in thenkasi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->