ஆசீட் வீசச் சொல்லி நாடகமாடிய பெண்.! பின் நடந்தேறிய விவகாரங்கள்.! - Seithipunal
Seithipunal


கடனிலிருந்து தப்பிப்பதற்காக  கள்ளக்காதலன் மூலம் ஆசிட் வீசி நாடகமாடிய பெண்ணையும் அவரது கள்ளக்காதலர் மற்றும் உடந்தையாகயிருந்த நபர்களையும் குணசேகரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகேவுள்ள மாடத்தூர் கோனம் பகுதியைச் சார்ந்தவர் லதா வயது 45. இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் மகன் ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் லதா சித்திரன்கோடு பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார்.

சம்பவம் நடந்த தினத்தன்று பேருந்தில் இருந்து இறங்கி தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவர் மீது ஆசிட் வீசி சென்றனர். இந்த சம்பவத்தால் அலறி துடித்தல் லதாவை  அருகில் இருந்தவர்கள் மீட்டு குலசேகரம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தது.

விசாரணையில் காவல்துறையினருக்கு லதாவின் மீது சந்தேகம் வரவே அவரிடம் தீவிரமாக விசாரணை செய்துள்ளனர். அதில் 35 லட்சம் கடனிலிருந்து தப்பிக்க தனது கள்ளக்காதலன் ஜஸ்டின் கிருபதாசுடன் இணைந்து ஆசிட் வீசி நாடகத்தை நடத்தியது அம்பலமானது. இதனைத் தொடர்ந்து லதா அவரது கள்ளக்காதலன் ஜஸ்டின் கிருப்தாஸ் உட்பட  மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a woman creates a drama in the name of acid attack with her lover to escae from loans


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->