திருவண்ணாமலை || எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றில் விழுந்த பெண் பலி
A woman fell into a well and died in Tiruvannamalai
திருவண்ணாமலை மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக கால் தவறி கிணற்றில் விழுந்த பெண் உயிரிழந்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் அரியபாடி பகுதியை சேர்ந்தவர் விவசாயி சிவகுமார். இவருடைய மனைவி விஜயலட்சுமி (41). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் விஜயலட்சுமி அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது மாடு கிணற்று அருகே சென்றதால் அதனை விரட்டுவதற்காக கிணற்று அருகே சென்ற விஜயலட்சுமி எதிர்பாராத விதமாக கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார்.
இவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் உயிரிழந்த விஜயலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A woman fell into a well and died in Tiruvannamalai