சாலையோர பள்ளத்தில் பிணமாக கிடந்த வாலிபர்.! போலீசார் தீவிர விசாரணை - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் சாலையோர பள்ளத்தில் வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் தொளார் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(26). இவர் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்த சரவணன் நேற்று இரவு 7 மணி அளவில் பெண்ணாடம் சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஆனால் வெகு நேரமாகியும் சரவணன் வீட்டிற்கு வராத நிலையில், பெண்ணாடத்திலிருந்து தொளார் செல்லும் சாலையோர பள்ளத்தில் சரவணன் இருசக்கர வாகனத்துடன் பிணமாக கிடந்துள்ளார்.

இதைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ஆவினங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரயோத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சரவணனின் முகத்தில் காயங்கள் இருப்பதால், அவரை யாராவது அடித்து கொலை செய்து உடலை வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்து, இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A young man found dead in a roadside ditch in Cuddalore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->