அட பாவமே!!! புலி தாக்கியதில் தோடர் இன வாலிபர் பலி!!! முழு விவரம் வேண்டுமா?
A young man from Thodar tribe was killed tiger attack
நீலகிரி உதகையடுத்த கவர்னர் சோலை பகுதியில் தோடர் இன மக்கள் வசிக்கும் கள்ளக்கோடு மந்து உள்ளது. இந்த மந்து பகுதியை சேர்ந்த 42 வயதான கேந்தர் குட்டன் என்பவர்.இவர் நேற்று மாலை அருகிலுள்ள கள்ளக்கோடு மந்து வனப்பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார்.

இரவு முழுவதும் வீடு திரும்பாத கேந்தர் குட்டனை, அவரது உறவினர்கள் அருகிலுள்ள வனப்பகுதியில் தேடியுள்ளனர்.அப்போது கேந்தர் குட்டன் புலி தாக்கி பாதி உடலுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.அவர்கள் உடனடியாக வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமையில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினார்.
இதில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பழங்குடியின இளைஞர் புலி தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆரக்காடு பகுதியில் பெண்ணை வனவிலங்கு தாக்கி கொன்ற நிலையில் தற்போது தோடரின இளைஞர் புலி தாக்கி உயிரிழந்தது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
English Summary
A young man from Thodar tribe was killed tiger attack