மது குடிக்க பணம் தர மறுத்த தொழிலாளி... பீர் பாட்டிலால் குத்திக்கொன்ற வாலிபர்..! சென்னையில் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


மது குடிப்பதற்கு பணம் தர மறுத்ததால் தொழிலாளியை வாலிபர் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கோவிலம்பாக்கம் எஸ்.கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மனோகர் (45). இவர் பழைய இரும்பு, பேப்பர் போன்ற பொருட்களை வாங்கும் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பழைய பாட்டில்கள், இரும்பு, பிளாஸ்டிக் போன்றவற்றை சேகரித்து விற்று வந்த கண்ணன்(28) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மனோகரிடம் நேற்று கண்ணன் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் மனோகர் பணம் கொடுத்த மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், பீர் பாட்டிலால் மனோகரை குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து மனோகரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மனோகரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மனோகர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போலீசார், மனோகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கண்ணனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A youth stabbed a worker to death with a beer bottle in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->