அமைச்சர் நிர்மலாவை பதவி நீக்கம் செய்க! குடியரசு தலைவருக்கு பறந்த கோரிக்கை!
Aathur Farmers and ED Notice issue
சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, ராமநாயக்கன் பாளையம் கிராமம், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த ஏழை விவசாயிகளுமான கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோரின் 6 1/2 ஏக்கர் நிலத்தை, சேலம் மாவட்ட பாஜக பொறுப்பாளர் குணசேகரன் அடிமாட்டு விலைக்கு வாங்க முறைப்பட்டுள்ளார்.
அனால், அவர்கள் விற்பதற்கு முன்வராததால், காவல்துறை, வருவாய்த்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகளின் துணையோடு தனது பெயருக்கு போலி பத்திரம் செய்துள்ளார் குணசேகரன்.
மேலும், அமலாக்கத்துறை சாதியை குறிப்பிட்டு சம்மன் அனுப்பியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்யக்கோரி, குடியரசு தலைவருக்கு ஐஆர் எஸ் அதிகாரி கடிதம் எழுதி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆத்தூர் விவசாயிகள் இருவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரத்தில், ஐஆர்எஸ் அதிகாரி பாலமுருகன் இந்த கடிதத்தை குடியரசு தலைவருக்கு எழுதியுள்ளார்.
English Summary
Aathur Farmers and ED Notice issue