பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ஹரிபத்மனுக்கு ஆதரவாக பிக்பாஸ் நடிகை.! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!  - Seithipunal
Seithipunal


கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் ருக்மணி தேவி கவின் கல்லூரியில் படித்து வரும் மாணவிகளுக்கு கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் இந்த கல்லூரியில் பணிபுரிந்து வரும் பேராசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாக புகார்கள் எழுந்தது. 

இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தேசிய அளவில் பேசும் பொருளானது.

ருக்மணி தேவி கலை கல்லூரியில் கடந்த 2019ஆம் ஆண்டு படித்து வந்த முன்னாள் மாணவி ஒருவர் நடன உதவி பேராசிரியராக பணியாற்றிய ஹரி பத்மன் மீது காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து, அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற்து.

இந்த விவகாரம் குறித்து, பிரபல நடிகை அபிராமி ஹரி பத்மனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஹரி பத்மனை மையமாக கொண்டு நாடகம் நடந்து வருகின்றது. கலாஷேத்ராவில் பெரிய பதவிகளுக்காக சக்திவாய்ந்த அரசியல் நடக்கிறது. இதுபற்றி, சமூக வலைதளங்களில் பரவுகின்ற தகவல்கள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன."என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Abhirami support To Haribathman


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->