வெளிநாடு வேலைக்கு செல்லும் மக்களே கவனம் : மீட்கப்பட்ட பெண், தாம்பரம் காவல் ஆணையர் அளித்த பேட்டி.! - Seithipunal
Seithipunal


வெளிநாடுகளில் அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையால் விவரம் தெரியாமல், விசாரணை செய்யாமல் செல்ல வேண்டாம் என்று, தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை, திரிசூலம் பகுதிகளிலிருந்து மஞ்சுளா என்பவர் குவைத் நாட்டிற்கு வீட்டு வேலைக்காக சென்று உள்ளார். அங்கு மிகவும் கஷ்டப்படுவதாகவும், உணவு கூட கொடுப்பதில்லை என்றும், தனது தாயை தொடர்பு கொண்டு தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தாம்பரம் மாநகர ஆணையர் அலுவலகத்தில் அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஐந்து நாட்களில் மஞ்சுளா தாயகம் திரும்பி உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தாம்பரம் காவல் ஆணையர் ரவி தெரிவிக்கையில், "வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர், சுற்றுலா விசாவில் செல்லாமல் முறையாக பணி விசா பெற்று செல்ல வேண்டும். முறையாக விவரம் அறிந்து, விசாரணை செய்து வெளிநாடு வேலைக்கு செல்ல வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

abroad for work rescued woman Tambaram Police Commissioner


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->