சென்னையில் திடீர் பரபரப்பு.. உள்வாங்கிய மெரினா கடற்கரை.!! - Seithipunal
Seithipunal


சென்னை மெரினா கடற்கரை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கடல் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கடந்த 2004ஆம் ஆண்டு உருவான சுனாமிக்கு பிறகு கடலில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக தென் மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் உள்வாங்குதல், கடல் நீர்மட்டம் தாழ்வு, உயர்வு, கடல் சீற்றம் , நீரோட்டம் மாற்றம், அலையின்றி குளம் போல் காட்சி அளித்தல் போன்ற மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. 

சென்னை கடற்கரை பகுதியிலும் அவ்வப்போது இதுபோல நடைபெறுகிறது. எலியட்ஸ் கடற்கரை, கொட்டிவாக்கம், பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடலில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சென்னையில் நள்ளிரவில் திடீரென கடல் உள்வாங்கியது. மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 10 முதல் 15 மீட்டருக்கு கடல் அரை மணி நேரத்திற்கு மேலாக உள்வாங்கியது. இதனால் மக்கள் கடும் பீதி அடைந்தனர். கடல் உள்வாங்கியதை கண்டு பலரும் ஆச்சரியமடைந்தனர். மேலும் பலர் கடல் உள்வாங்கிய தூரம் வரை நடந்து சென்று பார்த்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

absorption for marina beach


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->