#Justin | வழிகாட்டி பலகை சரிந்ததில்.. பறிபோன உயிர்.. சென்னை கிண்டியில் பரபரப்பு.!
Accident In guindy metro
சென்னை ஆலந்தூர் மெட்ரோ பகுதிக்கு அருகில் சாலையில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பலகை சரிந்து விழுந்ததில் ஒரு நபர் உயிரிழந்துள்ளார்.
சென்னை ஆலந்தூர் பகுதியில் அமைந்துள்ள மெட்ரோ அருகே சாலை வழிகாட்டி பலகை ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. இதில் மாநகர பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது
இதனால் சாலையில் வைக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டி பலகை சரிந்து விழுந்து ஒரு நபர் பலியாகியுள்ளார். இந்த பலகையின் மீது மாநகரப் பேருந்து இடித்ததால் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மீது பலகை சரிந்து விழுந்துள்ளது. அப்போது அருகில் நின்ற நபர் நசுங்கி உயிரிழந்துள்ளார்.