இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து.. பரிதாபமாக பலியான தம்பதியினர்...! - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் சீம்பால் கோட்டையை சேர்ந்தவர் தசரதன். இவரது மனைவி அமுதா. இவர்கள் வெட்டுக்காடு பகுதியில் உள்ள தோப்புகளை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தசரதன் தனது மனைவியுடன் விட்டு பகுதியிலிருந்து லோயர்கேம்ப் பகவதி அம்மன் கோவிலுக்கு செல்ல சாலையை கடக்க முயன்றார்.

அப்போது அங்கு வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர்களின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த தசரதனும் அவரது மனைவியும் தூக்கி வீசப்பட்டனர். தசரதன் சம்பவ இடத்திலேயே பலியான வழக்கில் அவரது மனைவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Accident Near Theni


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->