சொத்து குவிப்பு வழக்கு: அ.தி.மு.க முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு சிறை தண்டனை!
Accumulation case ADMK ex minister wife jailed
தமிழ்நாட்டில் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க கட்சி ஆட்சி அமைத்தது.
அப்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக அ.ம.பரமசிவம் இருந்தார். இவரது மனைவி நல்லம்மாள் வருமானத்திற்கு அதிகமாக சோத்து சேர்த்ததாக தி.மு.க ஆட்சி காலத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்த சிறப்பு நீதிமன்றம் பரமசிவத்துக்கு 2 ஆண்டுகளும் அவரது மனைவிக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2000 ஆண்டு பரமசிவன் மற்றும் நல்லம்மாள் இருவரும் மேல்முறையீட்டு மனு அளித்தனர்.
இந்த வழக்கு சுமார் 23 ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பரமசிவம் உயிரிழந்து விட்டார்.
இதனை அடுத்து இந்த மேல் முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்து கீழ் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்து வருமானத்துக்கு அதிகமாக 417 சதவீதம் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு நல்லம்மாள் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
இதற்கு முன் அவர் விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்தால் அந்த காலத்தை தண்டனையிலிருந்து கழிக்க வேண்டும் என நீதிபதி மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
English Summary
Accumulation case ADMK ex minister wife jailed