உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - அரசுக்கு சீமான் கோரிக்கை..! - Seithipunal
Seithipunal


உக்ரைனில் சிக்கி தவிக்கும் தென்னிந்திய மாணவர்களிடம் பாகுபாடு காட்டப்படுது அதிர்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் நடந்து வரும் போர் சூழல் காரணமாக அங்குள்ள இந்தியர்களை வெளியேற்றா அரசு முயற்சித்து வருகிறது. இதில், தென் பகுதியை சேர்ந்த மாணவர்களிடம் பாகுப்பாடு காட்டப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது. தமிழக மாணவர்களை மீட்டுக் கொண்டுவர முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உக்ரைன் நாட்டில் சிக்கியிருக்கும் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் அண்டை நாடுகள் மூலமாக மீட்கப்படும்வேளையில், தமிழகம் உள்ளிட்ட தென்னகப்பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

போலந்து நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் வடநாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, தமிழ்நாடு போன்ற தென்னாட்டுப்பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களை நாட்கணக்கில் காக்க வைப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

ஆகவே, இவ்விவகாரத்தில் சீரிய கவனமெடுத்து, தமிழக மாணவர்கள் மீது பாரபட்சமான போக்கைக் காட்டும் இந்திய தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக மாணவர்களை மீட்டுக் கொண்டுவர முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Action must be taken to rescue Tamil Nadu students stranded in Ukraine


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->