தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் அறிக்கையானது கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அப்போதைய முதல்வர் பழனிச்சாமி தான் பொறுப்பேற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரையின்படி அப்போதைய மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சேர்ந்த 3 வருவாய் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை அரங்கேற்றிய காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இன்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் பொழுது இன்ஸ்பெக்டராக பணியாற்றிய திருமலையை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பெயரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தற்பொழுது அவர் திருநெல்வேலி மாநகர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு கமிஷனராக பணியாற்றி வருகிறார். இதேபோன்று சுடலைக்கண்ணு, சங்கர், சதீஷ் ஆகிய போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தம் தொடர்பாக தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Action taken on police officers in Tuticorin shooting incident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->