10 நாளில் கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய நடிகர் பாலா.! குவியும் பாராட்டுக்கள்.!
actor bala build water purify plant in kayapakkam village
சின்னத்திரை மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. இவர் தான் சம்பாதிக்கும் பணத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறாா். அந்த வகையில், அவர் தன்னுடைய சொந்த செலவில் மலை கிராம மக்களுக்கு 4 இலவச ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து சுமாா் 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 கொடுத்து உதவினார். இந்த நிலையில், இவர் செங்கல்பட்டு மாவட்டம் கோட்டை கயப்பாக்கம் என்ற கிராமத்திற்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
அதாவது, அந்த கிராமத்தில் குடிநீரில் சுண்ணாம்பு கலந்து வருவதால், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து தருமாறு கிராம மக்கள் கோரிக்கை வைத்தனையடுத்து, நடிகர்கள் பாலா மற்றும் அமுதவாணன் இணைந்து ரூ.3 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து கொடுத்துள்ளனர்.
மேலும், அந்த குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக இருவரும் நேற்று திறந்து வைத்தனர். மனு கொடுத்த 10 நாளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து கொடுத்த பாலா மற்றும் அமுதவாணன் உள்ளிட்ட இருவருக்கும் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
actor bala build water purify plant in kayapakkam village