நாங்க சமாதானம் ஆகிட்டோம்! நடிகர் தனுஷ் வழக்கு முடித்து வைப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஒரு சொகுசு வீட்டிலிருந்து வாடைக்கு குடியிருந்தவரை காலி செய்ய மிரட்டியதாக, நடிகர் தனுஷுக்கு எதிராக தொடங்கப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. 

சென்னை போயஸ் கார்டனில் நளினா ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் அஜய் குமார் என்பவர் வாடகைக்கு குடியிருந்தார். 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவரின் வீட்டுக்கு வந்த சிலர், இந்த வீட்டை நடிகர் தனுஷ் விலைக்கு வாங்கி விட்டதாகவும், எனவே உடனே வீட்டை காலி செய்து தர வேண்டும் என்று கூறி மிரட்டி உள்ளனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த அஜய் குமார், நடிகர் தனுஷுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில்,  2024 ஜனவரி மாதம் வரை வாடகை ஒப்பந்தம் அமலில் உள்ளது என்றும், அதற்கு முன்பாகவே என்னை காலிப் செய்ய செய்து கொள்ளும்படி வற்புறுத்தியது சட்டவிரோதமானது என்றும், மின் இணைப்பு மற்றும் குடியு குடிநீர் இணைப்பை துண்டித்துள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், நான் முறையாக வாடகையை செலுத்தி உள்ளேன் இந்த விவகாரத்தில் தலையிட நடிகர் தனுஷ் உள்ளிட்டவருக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். 

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பும் சமரசம் செய்து கொண்டதாகவும், கடந்த மே மாதம் 31ஆம் தேதி வீட்டின் சாவி தங்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என்றும் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, நடிகர் தனுஷுக்கு எதிரான இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Dhanush Case Closed Chennai HC


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->