பாரத் என்ற பெயர் தேவையில்லாத ஆணி - நடிகர் சித்தார்த் பரபரப்பு பேட்டி.!
actor sidharth press meet in world sucide day function in chennai
பாரத் என்ற பெயர் தேவையில்லாத ஆணி - நடிகர் சித்தார்த் பரபரப்பு பேட்டி.!
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி அன்று உலக தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு தற்கொலை செய்துகொள்வதை தவிர்ப்பதற்கும், அதைத் தடுப்பதற்கும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மற்றும் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன.
அதில், ஒரு பகுதியாக சென்னையில், ’மாரத்தான் ஓட்டம்’, ’வாக்கத்தான்’ போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் பள்ளி வளாகத்தில் ’சினேகா தற்கொலை தடுப்பு மையம்’ சார்பில் ’தற்கொலை என்பது ஒரு தீர்வு அல்ல’ எனும் தலைப்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மூன்று கிலோமீட்டர் "வாக்கத்தான்" நடைபயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நடைப்பயணத்தை திரைப்பட நடிகர் சித்தார்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என்று சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதற்கு முன்னதாக பத்திரிகையாளர்களிடம் பேசிய நடிகர் சித்தார்த், ‘’இன்று தற்கொலை தடுப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இது மிகவும் முக்கியமான ஒன்று. மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் உள்ளதால் தற்கொலை எண்ணங்கள் வருகின்றன. அதற்கான விழிப்புணர்வு பேரணிதான் இன்று நடைபெறுவது’’ என்றார்.
இதைத் தொடர்ந்து ’இந்தியா - பாரத்’ பெயர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘’இந்தியாவில் சென்னையில் நாம் கூடி உள்ளோம். எந்த பெயரை யார் வைத்தார்கள் என்பது தேவை இல்லாத ஆணி’’ என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.
English Summary
actor sidharth press meet in world sucide day function in chennai