மாணவி மீது குறை கூறும் வகையில் எப்.ஐ.ஆர்! மக்கள் எப்படி புகார் அளிக்க வருவார்கள்? வெளுத்துவங்கிய உயர்நீதிமன்றம்!  - Seithipunal
Seithipunal


அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தாமே முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இன்று இரண்டாவது நாள் விசாரணையின்போது, வழக்குத் தொடர்பான விசாரணை அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்துள்ளது.

அதில், IPC-ல் இருந்து பி.என்.எஸ். சட்டத்துக்கு மாற்றியபோது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக FIR வெளியாகிவிட்டது என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீதிபதிகள் தெரிவிக்கையில், காவல்துறை தரப்பில் எப்.ஐ.ஆர். கசியவில்லை என எப்படி உறுதியாக சொல்ல முடியும்? எப்.ஐ.ஆரை யாரெல்லாம் பதிவிறக்கம் செய்தார்கள் என கண்டுபிடிக்க வசதி இருக்கும் போது குற்றவாளியை ஏன் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை?

முதல் தகவல் அறிக்கையில் பாதிக்கப்பட்ட மாணவி மீதே குறை கூறும் வகையில் இருக்கிறது. புகார் அளிப்பதற்கு காவல் நிலையத்திற்கு மக்கள் வருவதற்கே பயப்படும் நிலைதான் உள்ளது" என்று கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anna University Harassment case FIR Madras High Court 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->